*கனடா வன்னிச் சங்கத்தின் வேண்டுகோள்…….*
*அன்பார்ந்தபுலம்பெயர் உறவுகளே தொடரும் அவலங்கள்!*
இங்கே இணைக்கபட்டுள்ள படங்களையும், வீடியோக்களையும் பாருங்கள். பெருமழை வெள்ள அபாயமும் அனர்த்தமும் இன்றுவரையில் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன மழைக்கான எதிர்வு கூறலின்படி எதிர்வரும் 22-12-2023ம் திகதிவரை நீடிக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் வீடுகளை வெள்ளம் மூடியமை, தரமற்ற கொட்டில்களில் வாழ்கின்றவர்களினது கூரைகளின் நீர் ஒழுக்குக் காரணமாக அவற்றில் பிள்ளைகளோடு வசிக்கமுடியாமை, பிள்ளைகளுக்குப் போதிய உணவு சமைத்து வழங்கமுடியாமை போன்ற இடர்களை எதிர்நோக்குகின்றார்கள்.
இங்கு முக்கியமாக பாடசாலை மாணவர்களைக் கொண்ட கணவனை இழந்த பெண்தலைமைத்துவக் குடும்பங்களையும் மிகக் குறைந்த வருமானமுடைய பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் முக்கியமாகக் கருத்தில் கொண்டு இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
எனவே அன்பார்ந்த உறவுகளே உங்களது சிறுதுளியான உதவிகளை அன்போடு எதிர்பார்க்கின்றோம். ஒரு வீட்டிற்கு ஒரு தறப்பாள் போடுவதற்கு 6,200/= செலவாகும். சில வீடுகளுக்கு இரண்டு தறப்பாள் போடவேண்டியிருந்தால் இச்செலவு இரட்டிப்பாகும்.
அடுத்து குடும்ப நிலைகளைப் பார்வையிட்டு குடும்பம் ஒன்றிற்குக் குறைந்தது 5,000/= வரையிலான உலர்உணவுப் பொதிகளையும் வழங்க உள்ளோம்.
இவை அனைத்திற்கும் உங்கள் அனைவரினதும் உதவிகளையே நாடிநிற்கின்றோம். குறைந்தது ஒருவீட்டிற்காவது உதவி செய்து ஒரு குடும்பத்தினை உங்கள் பெயரால் காப்பாற்றுங்கள்..
20 Dollarகளுக்குமேல் நிதியுதவி செய்கின்ற அனைவருக்கும் வரிக்கழிவு அறக்கட்டளைப் பற்றுச் சீட்டு (Charitable Donation Receipt) வழங்கப்படும் என்பதனைக் கவனத்தில் கொள்ளவும். நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் vunitedcare4kids@gmail.com மின்னஞ்சல் முகவரி ஊடாகப் பணத்தினை அனுப்பிவைக்கலாம். பணம் அனுப்பிய அதே மின்னஞ்சலின் ஊடாக கடவுச் சொல்லையும் (password) வரிக்கழிவுப் பற்றுச்சீட்டினை எழுதுவற்கான முழுப்பெயர் விலாசம் தொலைபேசி இலக்கம் என்பவற்றினைத் தந்துதவுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
*அவசரத் தொடர்புகளுக்கு:*
வன்னிச் சங்கம்; 416 – 644 – 1113
சிவா இரட்ணசிங்கம் (தலைவர்) 416 – 520 – 1214.
பொ. சிவசுதன் (செயலாளர்) 416 – 558 – 1917.
விஜயகுமார் (பொருளாளர்) 647 – 202 – 8286
*இலங்கைத் தொடர்புகளுக்கு:*
தே. தேலக்சன் (தலைவர்) 94777396560
பொ. மதன் (செயலாளர்) 94779262965
கரிஸ் (உறுப்பினர்) 94764004295.
Add comment