Sep 25, 2024.
.
தமிழீழ அரசியல்துறையின் ஏற்பாட்டில் கனடாவில் இரு இடங்களில் தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
19.09.2024 அன்று மார்க்கம் நகரில் அமைந்துள்ள Aaniin Community Centre, 5665 14th Avenue, Markham,ON L3S 3K5 எனும் முகவரியில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வில் தியாக தீபம் திலீபன் அவர்களின் பெரியப்பாவான திரு.நாகராசா அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றி, வணக்க நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
23.09.2024 அன்று பிராம்டன் மாநகராட்சியில் அமைந்துள்ள
Gore Meadows Community Centre,10150 The Gore Road, Brampton,
ON L6P 0A6 எனும் முகவரியில் ஒழுங்கமைக்கப்பட்ட வீரவணக்க நிகழ்வில், பிராம்டன் மூத்தோர் சங்கத்தின் தலைவர் திரு. ராகவன் ராமநாதன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க, அவரைத் தொடர்ந்து மாவீரர் லெப்.சீலன் அவர்களின் தகப்பனார் திரு. பரஞ்சோதி அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றி வீரவணக்க நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
நடைபெற்ற இரு நிகழ்வுகளிலும் பலர் மிகுந்த உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு, தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தியதுடன், நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். தியாக தீபம் திலீபன் அவர்களுடன் பயணித்த மக்களில் சிலர் தங்களது நினைவுப் பகிர்வுகளையும், கவிதைகளையும் உணர்வுடன் வழங்கினார்கள்
Add comment