Thamileelaarasiyalthurai.ca

பொது வேட்பாளருக்காய் நாம் இணைவோம்!

தமிழீழ அரசியல்துறை கனடா
04. 09. 2024

அன்பான கனடா வாழ் தமிழ்உறவுகளே!

இன்றைய சூழலில் தமிழர் தொடர்ந்தும் சிங்கள இனவாத அரசினால் ஏமாற்றப்பட்டு வருவதை உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டிய தேவை எமக்கு உள்ளது, தாயகத்திலும் புலத்திலும் செயற்படும் அமைப்புக்கள், தேசியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் அனைவரும் பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து செயற்பட்டால்த்தான் எமது ஒற்றுமை எனும் பலத்தை உலகிற்கு காட்டுவது சாத்தியமாகும்.

இலங்கையில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழரின் ஒற்றுமையையும் பலத்தையும் உலகிற்கு காட்டுவதற்காகவும் மற்றும் தமிழரை தமிழரே ஆளவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்த புலத்திலும் தாயகத்திலும் உள்ள சிவில்அமைப்புக்கள் இணைந்து பொது வேட்பாளராக திரு.பா. அரியநேத்திரன் அவர்களை ஜனாதிபதிக்கான போட்டியில் களம் இறக்கியுள்ளனர். இவரிற்கு பலம் சேர்ப்பதற்காக தமிழீழ அரசியல்துறை கனடா நிர்வாகமும் பரவலாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இச்செலவிற்கான சிறுபகுதி நிதிப் பங்களிப்பை செய்வதற்கு தமிழீழ அரசியல்துறை கனடா உறுப்பினர்களே பொறுப்பெடுத்துள்ளனர்.

தமிழீழ அரசியல்துறை கனடா நிர்வாகம் பொது மக்களிடம் நிதிச் சேகரிப்பில் ஈடுபடவில்லை. தமிழீழ அரசியல்துறை கனடாவின் பெயரை பாவித்து யாரேனும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டால் எங்களிற்கு அறியத்தருமாறு அன்புரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் தேவையேற்படின் தமிழீழ அரசியல்துறை கனடாவின் பெயரில் இச்செயற்பாட்டிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும், அனைவரது கவனத்திற்கும் கொண்டு வருகின்றோம்.

நன்றி

நிர்வாகம்
தமிழீழ அரசியல்துறை கனடா.
(647)989 0552, (905) 744 8282

PDF
பொது வேட்பாளருக்காய் நாம் இணைவோம்!-1

தமிழீழ அரசியல்துறை

Add comment

Recent posts

தினசரி அறிவிப்புகள் : இணைய தளத்தில் இணைய தளத்தில்