Thamileelaarasiyalthurai.ca

உண்மைக்கு புறம்பான போலி அறிக்கைகளை நம்ப வேண்டாம், தமிழ் தேசியத்தை அழிக்கும் அன்னிய சக்திகளிற்கு துணை போகும் சில தமிழ் அமைப்புகள்!

உண்மைக்கு புறம்பான போலி அறிக்கைகளை நம்ப வேண்டாம், தமிழ் தேசியத்தை அழிக்கும் அன்னிய சக்திகளிற்கு துணை போகும் சில தமிழ் அமைப்புகள்!

இன்று தமிழர்களின் தமிழ்த் தேசிய போராட்டங்களை கொச்சைப் படுத்தியும், நீர்த்துப் போகச் செய்யும் வேலைகளிலும் சில குழுக்களும். தனி நபர்களும், சில அமைப்புக்களும் மற்றும் தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்களும் தமிழ் தேசியத்தை அழிக்கும் அன்னிய சக்திகளோடு சேர்ந்து பல வேலைத்திட்டங்களை மிகவும் ரகசியமாக முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள்,
நிதி சேகரிப்பில் தொடங்கி தமிழ் தேசியத்துடன் பயணிக்கும் அமைப்புக்களின் பெயரால் போலியான அறிக்கைகள் விடுதல் மற்றும் துவாரகாவின் வருகை தொடர்பாகவும், துவாரகாவின் மாவீரர் நாள் உரை போன்ற பல நாடகங்களை நடாத்தி வந்தமை அனைவரும் அறிந்ததே.

மக்களில் சிலரும் சில ஊடகங்களும் தமிழீழ அரசியல்துறையை நோக்கி துவாரகாவின் வருகை பற்றிய உண்மைநிலை அறிய கேள்வி எழுப்பியிருந்தனர்.
இவ்விடயங்கள் தொடர்பாக
தமிழீழ அரசியல்துறையின் பொறுப்பாளர் திரு . ஜெயாத்தன் அவர்களால் 24.01.2023 அன்று விழிப்புத்தான் விடுதலையின் முதல்படி என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், 03.09.2023 அன்று போலி அறிக்கைகளை நம்ப வேண்டாம் என்ற தலைப்பில் தமிழீழ அரசியல்துறையின் பொறுப்பாளர் திரு.ஜெயாத்தன் கையொப்பமிட்டு, அரசியல்துறையின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் ஊடகத்துறையால் காணொலி மூலமான பதிவினையும், அறிக்கையினையும் விடப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.
இருந்த போதும் தொடர்ந்தும் அன்னிய சக்திகளின் உதவியுடன் பல பொய்யான தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது. இதனை நம்ப வேண்டாம் எனவும் மக்களை விழிப்புடன் இருக்கும்படியும் தமிழீழ அரசியல்துறை கனடா நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் தமிழீழத் தேசியத் தலைவரையும் அவரின் குடும்பத்தினருக்கும் அவதூறு ஏற்படுத்தும் நாசகார வேலையை தேசவிரோத சக்திகளுடன் சேர்ந்து முனைப்புடன் செயல்படு பவர்களின் பெயர் விபரங்கள் விரைவில் ஆதாரபூர்வமாக வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம நேரத்தில் தமிழீழத் தேசியத்தலைவரின் பெயராலோ அல்லது அவரின் குடும்பத்தினரின் பெயராலோ நிதி சேகரிப்பில் ஈடுபடுபவர்களை நம்பவேண்டாமெனவும் அவர்கள் பற்றிய விபரத்தை உடனடியாக தமிழீழ அரசியல்துறை நிர்வாகத்திற்கு தெரிவிக்குமாறும் பொதுமக்களிடம் உரிமையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

அரசியல்துறையால் விடப்பட்ட அறிக்கைகளை பார்வையிடுவதற்கு..
விழிப்புத்தான் விடுதலையின் முதல்படி
https://youtu.be/nbzBwTL6NpU

போலி அறிக்கைகளை நம்ப வேண்டாம்

தமிழீழ அரசியல்துறை

Add comment

Recent posts

தினசரி அறிவிப்புகள் : இணைய தளத்தில் இணைய தளத்தில்