தியாகி திலீபன் அண்ணாவின் நினைவு வாரத்தில் பல இடங்களிலும் உணவுப் பொருட்கள் சேர்க்கப்பட்டு, பல அமைப்புக்களால் ரொரோண்டோவில் உள்ள பல உணவு வங்கிகளிற்கு அவரின் நினைவாக அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த வருடங்களை விட இந்த வருடம் பல மூத்தோர் அமைப்புக்களிடமும், நேராகவும் Markham, Vaughan, Brampton, Mississauga ஆகிய இடங்களில் தமிழீழ அரசியல்துறை கனடாவினால் உணவுப் பொருட்கள் சேர்க்கப்பட்டு Vaughan இல் அமைந்துள்ள உணவு வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னோடியாக Middle Field மூத்தோர் சங்கத்தினால் இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக சேர்க்கப்பட்டு கணிசமான உணவுப்பொருட்களை நன்கொடையாக வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add comment