கனடாவில் தமிழீழ அரசியல்துறையின் செயல்பாட்டாளர்கள் மார்க்கம் பகுதியில் படிமுறைத்தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களையும் , மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும் சந்தித்தனர்.
தமிழீழ அரசியல்துறையின் செயல்பாட்டாளர்கள் கடந்த சில மாதங்களாக ஊர்சங்கங்கள், கழகங்கள், தேசிய செயல்பாட்டாளர்கள் ஆகியோருடனான தொடர் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்ரனர், அதன் தொடர்ச்சியாக கனடா ஒன்ராரியோ மாநிலம், பிக்கரிங்கில் அமைந்துள்ள பூங்காவில் 20.08.2023 ஞாயிற்றுக்கிழமை இச்சந்திப்பு நடைபெற்றது. பலரும் கலந்து கொண்டதோடு கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.அத்துடன் மக்கள் இயக்க பிரதிநிதிகளால் மாதிரி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது இதில் மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.
Add comment