Thamileelaarasiyalthurai.ca

கனடாவில் தமிழீழ அரசியல்துறையினர் தமிழ் தேசிய செயல்பாட்டாளர்களுடனான கருத்தாடலும் ஊடக சந்திப்பும் நடைபெற்றது.

கனடாவில் தமிழீழ அரசியல்துறையினர் தமிழ் தேசிய செயல்பாட்டாளர்களுடனான கருத்தாடலும் ஊடக சந்திப்பும் நடைபெற்றது.

22.07.2023, Saturday)
கனடா ஒன்ராரியோமாநிலம்,மார்க்கம் நகரில் அமைந்துள்ள அனீனியன்பல்கசமூக நடுவத்தில்(Aaniin Community Centre, 5665-14th Ave,Markham) காலை 11 மணிக்கு ஊடக சந்திப்பு நடைபெற்றது. ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ்த்தேசியப்பற்றாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

தமிழினப்படுகொலை 1983 நினைவு கூறப்பட்டு இன்றைய சிங்கள இனவெறியரசின் தமிழின அழிப்பின் தொடர்ச்சியைத் தடுப்பதற்கான அறிவாயுத எழுச்சிக்காக மக்களை அணியமாக்கும் வழிமுறைகள் வெளிப்படுத்தியிருந்தார்கள்.
தொடக்க நிகழ்வாக 1987ஆம் ஆண்டுஅக்டோபர் மாதம் 5ஆம் நாள் சிங்கள இந்திய கூட்டுச் சதியினை முறியடிக்க சனையிட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர் லெப்ரினன் கேணல் குமரப்பா அவர்களின் உடன்பிறப்பு மாவீரர் குடும்ப உறுப்பினர் திரு.சிவபாலன் பாலசுந்தரம் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார்.
தமிழீழ மக்களின் உரிமைக்காக தம்முயிர்களை ஈகம் செய்த விடுதலைவேங்கைககளுக்கும் சிங்கள இனவெறியரசால் அழிக்கப்பட்ட அப்பாவித்தமிழர்களுக்கும் இரண்டுமணித்துளி அமைதிவணக்கம் செலுத்தப்பட்டது.
1991 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழீழம் யாழ்ப்பாண மாநிலம் சிலாபத்துறையில் சிங்கள இனவெறிப்படைகளோடு நேரடிபோரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர் லெப்ரினன் புலவர் அவர்களின் சகோதரி ஆதிசிவன் நிவேதிகா அவர்கள் ஈகைச்சுடரை ஏற்றி வைத்தார்.
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம்நாள் தமிழீழம் யாழ்ப்பாண மாநிலம் கோப்பாய் பகுதியில் இந்தியப்படைகளினுடன் நேரடிப்போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர் நிசார் அவர்களின் உடன்பிறப்பும் தமிழீழழ அரசியல்துறையின் நிர்வாகப்பொறுப்பாளருமான இந்திரலிங்கம் யோகறஞ்சன் அவர்கள் மலர்தூவி வணக்கம் செலுத்தியதோடு ஏனையவர்களும் மலர் வணக்கத்தில் கலந்துள்ளார்கள்.

தமிழீழ அரசியல்த்துறை கனடாவின் நிர்வாகப்பொறுப்பாளர் இந்திரலிங்கம் யோகறஞ்சன் அவர்களை தொடக்கவுரை வழங்குமாறு அழைத்ததோடு தொடர்ந்து நிகழ்வை தொகுத்து வழங்கும் பொறுப்பை யேமிரா கார்த்திக் அவர்கள் இந்திரலிங்கம் யோகறஞ்சனிடம் கையளித்திருந்தார். அதைத்தொடர்ந்து

தமிழின அழிப்பில் பாதிக்கப்பட்ட கருணாநிதி கந்தப்பு அவர்களின் நினைவுரையை வழங்கினார்.தொடர்ந்து சிங்கள இனவெறியரசால் முன்னெடுக்கப்பட்டதமிழினஅழிப்பின் கண் கண்ட சாட்சியாக கனடாமண்ணில் வாழும் தமிழீழ அரசியல்த்துறைப்பொறுப்பாளர் பிரபு அவர்கள் அமைப்பின் செயற்பாடுகள் பற்றிய விளக்கவுரை வழங்கினார்.தொடர்ந்து சிங்கள இனவெறியரசின் இனப்படுகொலைக்களத்தில் தமிழ்மக்களைக் காப்பாற்றும் உயிர்காக்கும் உயரிய பணிக்கு தம்மை ஈகம் செய்த மருத்துவப்பெருந்தகை மருத்துவர் வரதன் அவர்களின் தமிழீழ அரசியல்த்துறை செயற்பாடுகளில் தமது பங்கேற்பு பற்றி விளக்கியிருந்தார்.

எம்முயிர் தேசியத்தலைவர் கல்வி கற்றகல்லூரியின் முதல்வராக பணியாற்றியவரும் ரோரண்டோ மற்றும் யோர்க் பிராந்திய கல்விச்சபையின் ஆலோசகராக பணியாற்றியவரும் 16க்கு மேற்ப்பட்ட தமிழ் ஆங்கில மொழிகளில் நூல்களை வெளியீடு செய்தவரும் 20 ஆண்டுகளாக தன்னார்வதொண்டராக பணியாற்றியமைக்கான ஒன்ராரியோ மாநில விருது பெற்றவரும் பல்வேறு ஆளுமைகள் பட்டறிவு நிறைந்த சின்னையா சிவநேசன் அவர்கள் தமிழீழ அரசியல்த்துறையில் தனது செயற்பாடுகள் பற்றிவிளக்கியிருந்தார்.

கனடா ஒன்ராரியோமாநிலம் மார்க்கம் மிடில்பீல் முதியோர் சங்கத்தை உருவாக்கியவரும் 1986 ஆம் ஆண்டு திருகோணமலை திரியாய்ப் பகுதியில் சிங்கள இனவெறியரசபடைகளின் நேரடிப்போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர் லெப்ரினன் கரன் அவர்களின் மாமனார் செல்லப்பா குணரட்ணம் அவர்களின் செயற்பாடுகள் பற்றிய விளகக்கவுரையினை வழங்கியிருந்தார்.

தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.

கனடாவில் தமிழீழ அரசியல்துறையினர் தமிழ் தேசிய செயல்பாட்டாளர்களுடனான கருத்தாடலும் ஊடக சந்திப்பும் நடைபெற்றது.

Screenshot_20230724_120707
Screenshot_20230724_110800 (1)
Screenshot_20230724_110922
Screenshot_20230724_110857
Screenshot_20230724_110832
Screenshot_20230724_111023
Screenshot_20230724_111052
Screenshot_20230724_111155
Screenshot_20230724_110621
Screenshot_20230724_110950
Screenshot_20230724_120707 Screenshot_20230724_110800 (1) Screenshot_20230724_110922 Screenshot_20230724_110857 Screenshot_20230724_110832 Screenshot_20230724_111023 Screenshot_20230724_111052 Screenshot_20230724_111155 Screenshot_20230724_110621 Screenshot_20230724_110950

தமிழீழ அரசியல்துறை

Add comment

Recent posts

தினசரி அறிவிப்புகள் : இணைய தளத்தில் இணைய தளத்தில்