தமிழீழ அரசியல்துறை கனடாவின் பொறுப்பாளர் அவர்களின் பெயரையும், கடித தலைப்பையும் பயன்படுத்தி விடப்பட்ட போலி அறிக்கைகளுக்கு , 25.09.2023 அன்று தமிழீழ அரசியல்துறை கனடா பொறுப்பாளர் கி.பிரபு அவர்களால்
“போலி அறிக்கைகள்” தொடர்பான விழிப்புணர்வு அறிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழீழ அரசியல்துறை கனடா
25.09.2023
அன்பார்ந்த தமிழ் மக்களே!
போலி அறிக்கைகளை நம்ப வேண்டாம்.
தமிழீழ அரசியல்துறை கனடாவின் கடிதத்தலைப்பை ஒத்ததாக போலியாக தயாரிக்கப்பட்டு இந்தியாவின் நிலைப்பாடு எமக்கெதிரானது அல்ல என்ற தலைப்பில் 23.09.2023 என திகதியிடப்பட்டு சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்ட போலி அறிக்கை தமிழீழ அரசியல்துறை கனடாவின் உத்தியோகபூர்வ அறிக்கை இல்லை, இது கனடாவில் தேசவிரோதிகளால் தயாரிக்கப்பட்டு திட்டமிட்டு பரப்பப்பட்டது.
அன்பார்ந்த தமிழ் மக்களே! இவ்வாறான உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை நம்ப வேண்டாம். அத்துடன் நீங்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
எமது விடுதலைப்போராட்ட வரலாறுகளை சிதைக்கும் நோக்கிலும் எமது செயற்பாடுகளுக்கு கனடா அரசாங்கத்தின் ஒத்துழைப்பை சீர்குலைக்கும் நோக்கிலும், ஒடுக்கப்பட்ட பன்னாட்டு மக்கள் ஈழத்தமிழர்களுக்கு வழங்கிவரும் ஆதரவினை நீர்த்துபோகச்செய்யும் செயலாகவே இதை நாம் கருதுகிறோம். இவர்களை எம்மக்களுக்கு வெளிப்படுத்தும் காலம் மிக விரைவில் ஏற்படும்.
எமது உத்தியோக பூர்வ அறிக்கைகள் https://thamileelaarasiyalthurai.ca என்ற எமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட்டு உறுதிபடுத்திகொள்ளலாம்.
-நன்றி-
கி.பிரபு
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை கனடா
Add comment